தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை ஊராட்சியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி சரவணன் அவர்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தினர்.. காலை 8:30 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது.. காலை 9.00 மணியளவில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் 9:30 மணியளவில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தமயந்தி, ஊராட்சி செயலாளர் ரேணுகா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தினார்கள்.
No comments:
Post a Comment