வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மாவட்ட திறன் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 24, 2021

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மாவட்ட திறன் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மாவட்ட திறன் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திரபானுரெட்டி இஆப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடந்த 19.8.2021 அன்று  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, மாவட்ட திறன் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐடிஐ பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பி.எஸ்.ஏ ஆக்ஸிஜன் பிளாண்ட் ஆப்ரேஷன் மற்றும் மெய்ன்டனன்ஸ் தொடர்பான திறன் பயிற்சி அரசு பொது மருத்துவமனையில் வழங்கிட வேண்டும். மேலும், பி.எம்.கே.வி.ஒய் - 3.0 திட்டத்தின் மூலமாக கோவிட் வாரியர் கிராஸ் கோர்ஸ் ஜெனரல் டியூட்டி அசிஸ்டெண்ட் மற்றும் எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னிசியன் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழங்கிட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், உடனடி வேலைவாய்ப்பு மிகுந்த ஐடிஐ பயிற்சியில் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஐடிஐ பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் தொழிற் பழகுநர் பயிற்சி சட்டம் 1961-ன் படி, ஐடிஐ பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.எம்.செந்தில் முருகன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.பி.பரமசிவன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் திரு.ஹ.சுகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பிரசன்ன பாலமுருகன், பொது மேலாளர் (தாட்கோ) திரு.எஸ்.கே.யுவராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.அமீர்பாஷா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.கௌரிசங்கர் மற்றும் மாவட்ட திறன் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment