கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 5, 2021

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

தருமபுரி பேருந்து நிலையத்தில், கொரோனா வார விழாவையொட்டி  மாவட்ட ஆட்சியர்   விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

தருமபுரி  மாவட்டம் முழுவதும், கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும்  வகையில்  கடந்த 1  ஆம் தேதி முதல், 7 ம் வரை கொரோனா  வார விழா நடைபெற்று வருகிறது.   அதன் அடிப்படையில்,  இன்று  5 வது நாளாக தருமபுரி பேருந்து நிலையத்தில்  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரேனா மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியும் துண்டு பிரசுரத்தை  மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.   

சுகாதர துறை மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கள பணியாளர்கள் கலந்துக்கொண்டு பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்து பயணிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் முகத்தில் முககவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அதனையடுத்து பொது மக்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர், மருத்துவ துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment