சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 19, 2021

சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு.

சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார்கள் அமைக்கும் பிரதம மந்திரி கிசான் ஊர்ஜா சுரக்ஷா இவாம் உத்தான் மஹாபியான் (PM-KUSUM) திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் ஊர்ஜா சுரக்ஷா இவாம் உத்தான் மஹாபியான் (Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Uttan Mahabhiyan Scheme (PM- KUSUM)) திட்டத்தின் கீழ், சூரிய ஒளி சக்தியால் இயங்கும் மின்மோட்டார்களை இயக்குவது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுவதற்கான திட்டம், வேளாண் பொறியியல் துறை, மின்சாரத் துறை மற்றும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் சேர்ந்து பயனைடய மாவட்ட ஆட்சித் தலைவர் தருமபுரி அவர்கள் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இத்திட்டமானது, தமிழ்நாடு மின்வாரிய மின் விநியோக கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட விவசாய மின் மோட்டார்களை சூரியசக்தியின் மின்னாற்றல் மூலமும் இணைந்து இயக்குதல் ஆகும். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் சோலார் மின் உற்பத்தியை பயன்படுத்திக் கொள்வதுடன் வருமானமும் ஈட்டி பலனடைய வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும். இத்திட்டத்தில் மத்திய அரசின் மானியம் 30%, மாநில அரசின் மானியம் 30%, விவசாயிகள் தங்களது பங்களிப்பு தொகையாக செலுத்தவேண்டிய 40% தொகையில் 30% தொகையை வங்கியில் இருந்து கடனாக வங்கியின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

மேலும் இத்திட்டத்தில் சோலார் பேனல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின் உற்பத்திக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.28-ம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.33858/-ம் ஊக்கத்தொகையாக ரூ.0.50 பைசாவீதம் வருடத்திற்கு ரூ.3750/- வீதம் சேர்த்து தோராயமாக ரூ.40000/-ற்குமேல் வருமானம் ஈட்டலாம் என தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் விருப்ப விண்ணப்பத்தினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவிபொறியாளர் அவர்களிடம், பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 9385290514 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.) இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment