பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 19, 2021

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு புதிதாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கு (Fresh applications)விண்ணப்பித்து பயன்பெறலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவ / மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ / மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2021-22 ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள மாணவ / மாணவியர் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகியோ அல்லது கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் அனுப்ப கோரி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், மேற்படி 2021-22ம் நிதியாண்டிற்கான புதிதாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலக இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 (தொலைபேசி எண். 044-28551462, மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com) என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 30.11.2021க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment