சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட களாக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் மீனா(19) கடந்த ஓராண்டுக்கு முன்பு திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்தார்.அதே கம்பெனியில் பணிபுரிந்த தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தியம், வேலனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக் என்பவரை காதலித்து 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தலைஆடிக்கு களாக்காம்பாடி மீனா, வீட்டிற்கு இருவரும் சென்று தங்கினர். அங்கு வரதட்சணை கேட்டு கார்த்திக், மீனாவிடம் சண்டையிட்டு, பின்னர் இருவரும் கார்த்திக் வீட்டுக்கு திரும்பினர். கடந்த 15ஆம் தேதி மீனாவை அவரது அப்பா வீட்டில் 4 நாள் தங்கியிருக்கும்படி, நான் வந்து அழைத்துச் செல்வதாக கூறிச் சென்றார்.
மறுநாள் 16 ஆம் தேதியே மீனா வீட்டிற்கு வந்த கார்த்திக் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மீனா தகப்பனாருக்கு போன் மூலம் உனது மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது உறவினர்களுடன், வேலனூர் கிராமத்திற்கு சென்ற சுப்பிரமணி மகள் மீனா கழுத்திலிருந்த தாலி, காதில் தோடு, காலில் மெட்டி இல்லாததால் சந்தேகம் அடைந்தார். மகள் சாவுக்கு மருமகனே காரணம் என கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால், அரூர் ஆர்டிஓ விசாரணை செய்தார். இந்நிலையில் நேற்று மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின்பேரில் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.Thursday, August 19, 2021
New
வரதட்சணை கொடுமை புது பெண் சாவு: புது மாப்பிளை கைது.

About News Desk
Newer Article
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு.
Older Article
13 நிமிடங்களில் பல்வேறு சாதனை படைத்த சிறுமி.
அரசு மருத்துவமனையில் கண்தான இருவார விழா.Sept 02, 2021
அரசு கல்லூரி மாணவ, மாணவியருக்கு கரோனா தடுப்பூசி.Sept 02, 2021
Product Tags:
அரூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment