ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு; உதவி ஆட்சியர், கோட்டாட்சியர் நேரில் விசாரணை - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, August 6, 2021

ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு; உதவி ஆட்சியர், கோட்டாட்சியர் நேரில் விசாரணை

அரூர் அருகே ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கௌரவ குமார், கோட்டாட்சியர் வே.முத்தையன் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவர் ஓடை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, திறந்தவெளி கிணறு அமைத்து, அந்த கிணற்றில் மும்முனை மின்சார இணைப்பு பெற்று மின்மோட்டாரை இயக்குவதாக புகார் எழுந்தது. 


இது குறித்து அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி கோ. ஏழுமலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வருவாய் துறை மற்றும் மின்சார வாரியத்துக்கு தகவல் கேட்டிருந்தார். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லையாம். மேலும், ஓடை புறம்போக்கு நிலத்தை பட்டா நிலம் என்று வருவாய்த்துறை சார்பில் வழங்கப்பட்ட சான்றுகளில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விவசாயி கோ.ஏழுமலை, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்திருந்தார். 


இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவின்படி,  உதவி ஆட்சியர் (பயிற்சி) கௌரவ குமார், அரூர் கோட்டாட்சியர் வே.முத்தையன், வட்டாட்சியர் கனிமொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், எல்லப்புடையாம்பட்டியில் அரூர்}சித்தேரி சாலையோரத்திலும், வரட்டாறு ஓரத்திலும் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களை நேரில் பார்வையிட்டு, நில அளவீடு (சர்வே) செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இதில், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன், உதவிப் பொறியாளர் அருள், வருவாய் ஆய்வாளர் கம்ருதீன், கிராம நிர்வாக அலுவலர் ஜான்சி ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment