தருமபுரி மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஆர்த்தோ சங்கம் இணைந்து எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு "அடிப்படை உயிர் காக்கும் திறன்கள்" என்றத் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தில் தருமபுரி மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சக்தி அனைவரையும் வரவேற்று நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.அருர் அரசு ஹாஸ்பிட்டல் எலும்பியல் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் அருண் பிரகாஷ் ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்தை தரும். ஆபத்து, விபத்துக்களிலும் மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை மாணவ, மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நமது நாட்டில் அதிக விபத்துக்கள் நடைபெறுகிறது. அதில் 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்களே அதிக விபத்துக்குள்ளாகிறார்கள். விபத்து ஏற்பட்டவர்களுக்கு சில நேரங்களில் மூளைக்கு செல்லும் இரத்தம் 3-5 நிமிடங்கள் செல்லவில்லை என்றால் இறப்பு ஏற்படும். அவர்களுக்கு முதலுதவி தேவைப்படுகிறது. எனவே மாணவ, மாணவிகள் முதலுதவி பற்றிய தெரிந்து கொள்வது அவசியம் என் பேசினார்.
பின்னர் சட்ட வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கமளித்தார்.
இக்கருத்தரங்கத்தில் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இறுதியாக இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர் சிவகுமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment