பொய்யப்பட்டி - அனுமன் தீர்த்தம் சாலையில் விபத்து பகுதியில் பாறாங்கற்கள் அகற்றும் பணியினை எம்எல்ஏ சம்பத்குமார் ஆய்வு.
அரூர் அருகே பொய்யப்பட்டி -அனுமந்தீர்த்தம் வனப்பகுதி போக்குவரத்து சாலையில் சட்டையம்பட்டி பகுதியில் ஆபத்தான வளைவு பகுதியில் சாலை ஓரங்களில் பெரிய பாறாங்கற்கள் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த சாலையோர கற்களை அகற்ற பொதுமக்கள் அரூர் எம்எல்ஏ சம்பத் குமாரிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் நெடுஞ்சாலைத்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் அந்த விபத்து பகுதியில் அமைந்துள்ள பாறைக் கற்களை வெடிவத்து உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாறாங்கற்கள் அகற்றும் பணியினை எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment