அஞ்செட்டி அருகே மயானத்திற்கு இடம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல், சுமூக பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மயானத்திற்கு இடம் கேட்டு கிராம மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர் அதிகாரிகளின் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது
அஞ்செட்டி அருகே அத்திமரத்தூர் கிராமத்தில் மயான வசதி இல்லை என நீண்டகாலமாக அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஈடுபட்டு வந்தனர், ஆனால் இதுவரை அதற்கு தீர்வு கிடைக்காததால் கிராம மக்கள் ஒன்று திரண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி இன்று காலை அஞ்செட்டி ஒகேனக்கல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
பின்னர் ஒரு கட்டத்தில் அரசு நிலத்தில் 15 சென்ட் வழங்குவதாக உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் இந்த போராட்டம் காரணமாக அஞ்செட்டி ஒகேனக்கல் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
No comments:
Post a Comment