கடன் பிரச்சனை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, August 6, 2021

கடன் பிரச்சனை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை.

கடன் பிரச்சனை காரணமாக கடிதம் எழுதி வைத்து படுக்கையறையிலேயே 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மத்திகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சொர்னபூமி லே அவுட் பகுதியில் வசித்து ஆன்லைன் வர்த்தகம் மேற்கொண்டு வந்தவர் மோகன்(45). கிருஷ்ணகிரி அடுத்த ஆலங்காயம் இவரது சொந்த ஊரானலும் ஒசூர் பகுதியிலேயே தங்கி தொழில் மேற்கொண்டு வந்துள்ளார்..

தொழில் போட்டி காரணமாக மோகன் வங்கி உள்ளிட்டவைகளில் கடன் பெற்று தொழிலில் சொல்லிக்கொள்ளும்படியாக வருமானம் கிடைக்காததாலும் கடன் அதிகரித்ததாலும் மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்து நேற்றிரவு மோகனின் தாயார் வசந்தா(61) வீட்டின் கீழ் தளத்தில் உள்ள படுக்கறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

வீட்டின் மேல்தளத்தில் உள்ள படுக்கையறையில் மோகனின் மனைவி ரம்யா(36) மற்றும் அவரது 10 வயது மகள் அன்மயி ஆகிய இருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் மோகன் படுக்கையறையின் தரையில் தலை,முகம் முழுவதும் பாலிதீன் கவரால் சுற்றப்பட்டு சினிமா பாணியில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒசூர் டிஎஸ்பி முரளி தலைமையிலான மத்திகிரி போலிசார் மோகனின் வீட்டில் பார்வையிட்டதில்


கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக்கொள்வதாக கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள போலிசார்


சம்பவ இடத்தில் மத்திகிரி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment