'வித் யூ' கல்வி அறக்கட்டளையின் வாயிலாக 'மூலிகை செடிகள்' நடவு செய்யப்பட்டது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, August 6, 2021

'வித் யூ' கல்வி அறக்கட்டளையின் வாயிலாக 'மூலிகை செடிகள்' நடவு செய்யப்பட்டது.

'வித் யூ' கல்வி அறக்கட்டளையின் வாயிலாக 'மூலிகை செடிகள்' ஓசூரில் நடவு செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், "வித் யூ' கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின்" வாயிலாக கல்வி சார்ந்த பணிகள் மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளும் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று 06.08.2021, ஒசூர் முல்லை நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ குணம் கொண்ட கரிசலாங்கண்ணி, தூதுவளை, பசலை, கற்பூரவல்லி, நொச்சி, துளசி, வெட்டிவேர், ஆடாதோடா, ரணகள்ளி கீழாநெல்லி, கற்றாழை போன்ற 100 வகையான மூலிகைச்செடிகள் இயற்கை உரங்கள் இட்டு சிறப்பாக நடவு செய்யப்பட்டன.

மூலிகை செடிகள் நடவு செய்யும் இந்த நிகழ்ச்சியில் "வித் யூ' கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின்" உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாற்று அமைப்பை சார்ந்த தோழர்கள் என 30 கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்

No comments:

Post a Comment