ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பள்ளி செல்லா மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகள் / மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு ஆகஸ்டு 10.08.2021 தேதி முதல் நடைபெற உள்ளது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் 6 முதல் 19 வயதுக்ககுட்பட்ட பள்ளிச் செல்லா மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் 10 முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முன் திட்டமிடல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
நகராட்சி, அனைத்து ஒன்றியங்களில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை பயிற்சியாளர், பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்படும் குழந்தைகள் அவர்களின் வயதுக்கேற்ப உடனடியாக அப்பகுதியில் உள்ள முறையான பள்ளிகளிலும், சிறப்புப் பயிற்சி மையங்களிலும், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளனர்.
அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்த பள்ளிச் செல்லா, பள்ளி இடைநின்ற மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகளுக்கு அரசு துறை அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பேசினார்.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ந.கீதா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள் ) மரு.பி.ஆர்.ஜெமினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.மு.சிவகாந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.ரா.பாலசுப்பிரமணி, திரு.மு.பொன்முடி, திரு.தீ.சண்முகவேல், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.என்.இரவிக்குமார் உட்பட கல்வித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment