அவ்வையார் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, September 1, 2021

அவ்வையார் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.

செப்டம்பர் 1 இன்று பேருந்து நிலையம் அருகே உள்ள அவ்வையார் மேல்நிலைப்பள்ளியில்  கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்றால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் (செப் 1) பல்வேறு கட்டுபாடுகளுடன் தமிழ்நாடு அரசு பள்ளிகளை திறக்க ஆணை பிறப்பித்துள்ளது.அதன்படி இன்று அவ்வையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தரசா தலைமையில் மாணவியருக்கு முககவசம் அணிந்து பாதுகாப்புடன் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தனர். வகுப்பறையில் 20 மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.

பள்ளியில் 50 சதவிகித மாணவிகள் மட்டும் அனுமதித்தனர், பள்ளிக்கு வரும் மாணவிகள் வெப்பமானி வைத்து பரிசோதனை செய்யப்பட்து. வகுப்பில் சமூக இடைவெளியுடன்  அமர வைக்கப்பட்டனர். சானிடைசர் கொண்டு கைகளை கழுவ தண்ணீர், சோப்பு ஆகியவை வகுப்பறை முன்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலை பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை செய்து தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தலைமையாசிரியை தலைமையில் மாணவிகளை பாதுகாப்பாக வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment