109 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.09 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, July 19, 2021

109 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.09 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டம் சார்பில் 109 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.09 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.



தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டம் சார்பில் 109 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7.09 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் ஊரக ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும், மகளிரின் சமூக பொருளாதார ஆற்றலை மேம்படுத்துவதற்கும், 2012-13 ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது. 


மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் உள்ளிட்ட சமுதாய அமைப்புகளை ஊரகப்பகுதிகளில் உருவாக்கி அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வருமானத்தை பெருக்கவும், இத்திட்டம் பெரிதும் உறுதுணையாக உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க நிதி தவிர சுய உதவிக் குழுக்களின் பொருளாதார கடன் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்திடும் பொருட்டு வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 


ஒரே பகுதியில் வசிக்கக் கூடிய ஒத்த கருத்துடைய மக்கள் தங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தாங்களாகவே முன்வந்து ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு சுயஉதவிக்குழு ஆகும். மகளிர் திட்டத்தின் இலக்கு மக்கள் மிகவும் ஏழை, ஏழை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்ற பிரிவைச் சார்ந்த மக்களாவார்கள். இந்த ஏழை எளிய மக்களெல்லாம் குழுக்களாக இணைவதன் மூலம் தங்களின் உரிமைகளுக்காக ஒன்றாகக் குரல் கொடுக்க முடியும். தங்களின் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற முடியும்.


இவ்வாறாக மக்களை ஒன்றாக இணைப்பதற்கும் அவர்களை திறமை உள்ளவர்களாய் உருவாக்குவதற்கும் சுயஉதவிக்குழு என்பது ஒரு சிறந்த கருவியாக உள்ளதை தமிழ்நாட்டின் நீண்ட வரலாற்றில் அறியலாம்.”சேமிப்பு கடன் மற்றும் காப்பீடு” ஆகியவை நிலைத்த வாழ்வாதாரத்திற்கும் வறுமையை குறைக்கவும் இன்றியமையாததாகும். இச்சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க சுயஉதவி குழுக்கள் மிகவும் அவசியம் ஆகும்.  தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தகுதியான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் வங்கி கடன் இணைப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. 


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குவதுடன் அவர்களுக்கு தேவையான கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவிகளை முறையாக பயன்படுத்திக் கொண்டு சுய உதவிக்குழுக்கள் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றியை அடைய முடியும். தனியாக செயல்படுவதை விட ஒரு குழுவாக ஒரு தொழிலை மேற்கொள்ளும் போது அதை எளிதில் வெற்றி பாதையில் அழைத்துச் செல்ல இயலும்.



குழந்தை திருமணங்களை தடுப்பதில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி அதன் மூலம் சுயமாக தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தில் மேம்பட வேண்டும். பெண்கள் படிக்கவில்லை என்றால் அவர்களின் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வி அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே பெண்கள் சிறந்த முறையில் கல்வி கற்று பொருளாதாரத்தை வலுப்படுத்தி குடும்பத்தை தலைமை ஏற்று நடத்தும் அளவிற்கு மாற வேண்டும். அரசு பணிகளுக்கு செல்வதற்கு பெண்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் முதல் உயர் பதவிகளை அடைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.



இந்நிகழ்வில் கூடுதல் /ஆட்சியர் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.வைத்தியநாதன், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.இராமதாஸ், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திரு.ஏ.பழனி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் திரு.பழனிமணி, உதவி பொது மேலாளர்(நபார்டு) திரு.பிரவீன், உதவி திட்ட
அலுவலர்கள் (மகளிர்திட்டம்) திரு.அங்குசாமி, திரு.சிவக்குமார், திரு.கணேசன், திரு.ஜாப்காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment