கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் இம்மிடிநாயக்கனபள்ளி குறுவள மையத்திற்குட்பட்ட நடுநிலை, உயர்நிலை , மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலம் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
6 மாணவர்கள் பரிசுகளை வென்றனர். இந் நிகழ்வில் அனைவரையும் ஆசிரியர் பயிற்றுநர் திரு. கி.வைத்தியநாதன் வரவேற்றார். முதல் பரிசாக டேப்லெட் இரண்டு மாணவர்கள் வேணு, செளமியா பெற்றனர். இரண்டாம் பரிசாக இரண்டு மாணவர்கள் ஆன்ட்ராய்டு மொபைல் ரகுபதி, சந்த்ரு பெற்றனர். மூன்றாம் பரிசாக சயின்டிபிக் கால்குலேட்டர் அபிதா, மானஸா இரண்டு மாணவர்கள் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. B.ராமமூர்த்தி, பொருளாளர் திரு. B. ஜெய்குமார், தலைமையாசிரியர் திரு. சாய்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் திருமதி. இராஜலட்சுமி நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment