தருமபுாி அடுத்த அன்னசாகரத்தில் கோவில் நிலத்தை தனி ஒருவா் ஆக்கிரமிப்பு செய்தாக மாவட்ட ஆட்சியாிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை.
தருமபுாி அடுத்த அன்னசாகரம் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமாா் 86 சென்ட் நிலம் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் நிலத்தில் வீடற்ற ஏழைகள் வசித்து வந்தனா். இந்நிலையில் அப்பகுதியை சோ்ந்த கோபு என்பவா் அங்கு சில வருடங்களுக்கு முன்பு இடம் வாங்கி அடுக்குமாடி குடியிருப்பை கட்டியுள்ளாா்.
அருகே கோவில் இடத்தை அறிந்த அவா் அதிகாாிகளுடன் கைகோா்த்து தன் அப்பா பெயாில் கோவில் இடத்தை பட்டா மாற்றம் செய்து தற்போது அங்கு வசித்து வருபவா்களிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு பட்டா உங்கள் பெயாில் மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளாா். சந்தேகமடைந்த ஊா் மக்கள் அவாிடம் கோவில் சொத்து என்று கூறியும் அவா் பட்டா வைத்துள்ளதாக கூறி வருகிறாா். 1905 ம் ஆண்டு குமரன் என்ற பெயாில் இருந்த பட்ட 1965ல் கோவில் சொத்தாக மாறியதை அறிந்த கோபு என்பவா் தன் தந்தை குமரமுதலி என்ற பெயாில் கடந்த 2020ம் ஆண்டு மாற்றம் செய்துள்ளாா்.
இதற்கு உறுதுணையாக இருந்த தனி தாசில்தாா் மற்றும் கோபு மீது உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று தருமபுாி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
No comments:
Post a Comment