அரூரில் ஒருவருக்கு கத்திக் குத்து: 4 பேருக்கு போலீசார் வலை.
அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த லோகேஷ்(21) இவரது நண்பர் அஜித் ஆகிய இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அரசுக்கு சொந்தமான பட்டுப்பூச்சி நிலத்தின் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பப்பு, ராகுல் மேலும் இரு நபர்கள் என மொத்தம் நான்குபேர் குடி போதையில் இருந்துள்ளனர்.
அந்த வழியாக சென்று கொண்டிருந்த லோகேஷ்சை அந்த நான்கு நபர்கள் தகாத வார்த்தையால் திட்டி பேசியதோடு இல்லாமல் ஏற்கனவே அவர்கள் வைத்திருந்த கத்தியால் தலைமீது தாக்கி மிரட்டியுள்ளனர். படுகாயமடைந்து லோகேஷ் அரூர் அரசு ஹாஸ்பிட்டலில் முதலுதவி வழங்கி, மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லோகேஷ் கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment