செல்போன் டவர் அமைக்க எம் டி சி நகர் குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு டவர் அமைக்கும் இடத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே எம்டிசி கார்டன் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டின் மீது கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர் ஆனால் திடீரென செல்போன் டவர் அங்கு நிறுவப்பட்டது இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர் பிறகு சட்டமன்ற உறுப்பினர் தலையிட்டு பொதுமக்கள் அனுமதித்தால் தொடர்ந்து டவர் அமையுங்கள் இல்லையேல் அகற்றி விடுங்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகராட்சிக்கும் மனு அளித்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செல்போன் டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது இந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செல்போன் டவர் அமைக்க வேலை துவங்கப்பட்டது இதனால் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி இன்று செல்போன் டவர் அமைக்கும் வீட்டின் முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது தற்போது வேலை நிறுத்தப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் இங்கு ஏற்கனவே ஏராளமான டவர் இருந்தபோதிலும் மீண்டும் டவர் அமைக்க கூடாது என்றும் இங்கு குழந்தைகள் இருதயநோய் நோயாளிகள் வயதானவர்கள் என ஏராளமானோர் உள்ளனர் ஆகவே பொதுமக்கள் நலன் கருதி டவர் அமைக்க கூடாது மீண்டும் அமைக்கும் பணியைத் தொடங்கினால் எம் டி சி கார்டன் பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த செல்போன் டவரை அகற்றுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment