பாரதமாதா மக்கள் சிந்தனை மற்றும் பாரதமாதா ஆன்மீக சேவை மையம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தர்மபுரி எஸ்.வி.ரோட்டில் உள்ள பாரதமாதா தேவிக்கு அலங்காரம் செய்து நேதாஜி ராணுவ படையில் பணியாற்றிய சிவகாமி அம்மாள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். அண்ணல் காந்தி, காமராஜ், நேரு, மகாகவி பாரதியார், சுப்ரமணிய சிவா, கக்கன்ஜி, வ.உ.சி.தியாகி தீர்த்தகிரி ஆகியோரின் உருவ படத்தீற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சுதந்திர கொடிஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிவக்குமார், கோவிந்தராஜன், சுகுமார், கோவிந்தசாமி, பாலகிருஷ்ணன், தர்மபுரி யூனியன் சேர்மன் செல்வம், அன்னை கஸ்தூரிபா சேவா சங்க தலைவர் சக்திவேல், கண்ணன், காளியம்மாள், ஆனந்த் ஆகியோர் கலந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்தியலிங்கம் கதர் ஆடை அணிவித்தார். நிகழ்ச்சியை பாரதமாதா மக்கள் சிந்தனை பேரவை மற்றும் ஆன்மீக சேவா சங்க தலைவர் பிரதீப்குமார்,பொது செயலாளர் வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment