சுதந்திர தின நாளில் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் உணவுப் பொட்டலம் வழங்கிய எம்எல்ஏ. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 15, 2021

சுதந்திர தின நாளில் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் உணவுப் பொட்டலம் வழங்கிய எம்எல்ஏ.

சுதந்திர தின நாளில் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் உணவுப் பொட்டலம் வழங்கிய அரூர் எம்எல்ஏ.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே தீர்த்தமலை ஸ்ரீ  தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாக சமபந்தி உணவு பதிலாக, பொட்டலங்களாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பொட்டங்களை வழங்கினார். 

தீர்த்தமலை  கோவில் செயல் அலுவலர் சரவணன்குமார், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, ஒன்றிய கவுன்சிலர் புஷ்பலதா ரவிக்குமார் நரிப்பள்ளி கூட்டுறவு சங்கத் தலைவர் வாசுகி சிற்றரசு, பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment