தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து பரிசுகளை வழங்கினார். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 15, 2021

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திரதின விழாவில் மண்டல பொது மேலாளர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து, ஓட்டுநர், தொழில் நுட்ப பணியாளர்கள், ஓட்டுநர் பயிற்றுநர், பயணச்சீட்டு பரிசோதகர், உதவி பொறியாளர், கிளை மேலாளர் மற்றும் துணை மேலாளர் ஆகியோர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டல அலுவலக வளாகத்தில் இன்று (15.08.2021) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மண்டல பொது மேலாளர் திரு. S.ஜீவரத்தினம், அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தும், சிறப்பாக பணியற்றிய ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், ஓட்டுநர் பயிற்றுநர், பயணச்சீட்டு பரிசோதகர், உதவி பொறியாளர், கிளை மேலாளர் மற்றும் துணை மேலாளர் (பணி) ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கி தலைமையுரை ஆற்றினார். 

முன்னதாக மண்டல மேலாளர் அவர்கள் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்கள் இவ்விழாவில் திரு.V.K.ஜெயபால் துணை மேலாளர் (வணிகம் & போக்குவரத்து), திரு.T.மோகன்குமார் துணை மேலாளர் (தொழில்நுட்பம்), திரு.K.ராஜராஜன், துணை மேலாளர்(பணி), திரு.V.முரளி உதவி மேலாளர்(பணியாளர்), திரு.K.C.இளங்கோவன் உதவி மேலாளர்(சட்டம்) உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். 

No comments:

Post a Comment