தேசிய கொடியினை ஏற்றி வைத்து நற்சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள், மாவட்ட ஆட்சியர்.. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 15, 2021

தேசிய கொடியினை ஏற்றி வைத்து நற்சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள், மாவட்ட ஆட்சியர்..

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற 75-வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, கொரோனா நோய் தடுப்பு மற்றும் இதர பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த 144 அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் அரசுத்துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு 52.53 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 75-வது சுதந்திர தினவிழா நேற்று (15.08.2021) நடைபெற்றது. இச்சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து, வண்ண பலூன்களையும், வெள்ளைப்புறாக்களையும் வானில் பறக்கவிட்டு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொணர்டார்கள்.

பின்னர், கொரோனா நோய் தடுப்பு மற்றும் இதர பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை சார்பில் 15 நபர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 51 நபர்களுக்கும், பேரூராட்சிகள் துறை சார்பில் 10 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 15 நபர்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 12 நபர்களுக்கும், கலை பயர்பாட்டுத்துறை சார்பில் 10 நபர்களுக்கும், பல்வேறு அரசுத்துறைத் தலைவர்கள் 18 நபர்களுக்கும் 137 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும், சிறந்த சேவை புரிந்த தருமபுரி நகர்நல ஆரம்ப சுகாதார நிலையம், நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாட்லாம்பட்டி துணை சுகாதார நிலையம் ஆகிய 3 சுகாதார நிலையங்களுக்கு சிறப்பு விருதுகளையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறந்த மருத்துவமனைகளாக தேர்வு செய்யப்பட்ட தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கே.வி. மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளுக்கு சிறந்த மருத்துவமனைகளுக்கான விருதுகளையும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சிறந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கான விருதினையும், தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சிறந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கான விருதினையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, வருவாய்த் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 2.00 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாகளையும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ. 12.60 இலட்சம் மதிப்பீட்டிலான பசுமை வீடு கட்டுவதற்கான மானியத்தினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 74,871 மதிப்பீட்டிலான சலவைப்பெட்டி, ஆடு, கோழி வளர்ப்பு நிதியுதவி, துணி வியாபார நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைச் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 2.00 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாகளையும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ. 7,800 மதிப்பிலான இலவச தையல் இயந்திரத்தினையும், மாற்றுத்திறனாளி நலத்துறைச் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3,82,500 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், தோட்டக்கலைத்துறைச் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 1,28,133 மதிப்பிலான் பிரதம மந்தரி விவசாய நுண்ணீர் பாசன திட்ட மானிய நிதியுதவி மற்றும் வேளாண் உபகரணங்களையும், மகளிர் திட்டம் சார்பில் பூதான அள்ளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ. 30.00 இலட்சம் மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன் உதவி என பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ.52,53,304 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.

பின்னர், நாட்டுப்புற கலைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செம்மொழி இசைத்தென்றல் கலைக்குழுவின் கைச்சிலம்பாட்டமும், கலை நிலா கலைக்குழுவின் சாட்டை குச்சியாட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு.குணசேகரன், முதன்மை குற்றவியல் நடுவர் திரு.ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.கலைச்செல்வன் இ.கா.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.வைத்திநாதன், இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி உதவி திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் திரு.முத்தையன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி. சித்ரா சுகுமார், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.மலர்விழி வள்ளல், இணைப்பதிவாளர் (கூட்டுறவுச்சங்கங்கள்) திரு.இராமதாஸ், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.க.அமுதவல்லி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பூ. இரா.ஜெமினி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி.தேன்மொழி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.அ.அய்யப்பன், தோட்டகலைத்துறை துணை இயக்குநர் திருமதி.மாலினி, உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் ) திரு.சீனிவாசசேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குருராவ், தருமபுரி வட்டாட்சியர் திரு.இராஜராஜன், உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment