தருமபுரி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வகுத்துபட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கடந்த 2019ஆம் ஆண்டு இந்த பகுதியில் தனியார் நிலத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்தது இதனால் அந்த பகுதி மக்கள் செல்போன் டவர் அமைக்கக்கூடாது கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என கருதி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர் இதையடுத்து செல்போன் அமைக்கும் பணி பாதியுடன் நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து நேற்று செல்போன் டவர் இயங்குவதற்கு தேவையான ஜெனரேட்டர் உள்ளிட்ட தளவாட சாமான்கள் தனியார் செல்போன் நிறுவனத்தினர் கொண்டு வந்து பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அதைப் பார்த்த இந்த கிராம மக்கள் தளவாட சாமான்கள் இழக்கக்கூடாது மேலும் செல்போன் டவர் இயங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் நிலத்தில் பகுதி போட்டி அரசு பள்ளி அருகே உள்ள தனியார் நிலத்தில் தனியார் செல்போன் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியை செய்தது செல்போன் டவர் அமைத்தால் பள்ளி மாணவர்கள் பெரியவர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கருதி நாங்கள் செல்போன் டவர் அமைக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து செல்போன் டவர் அமைக்கும் பணி கட்டுமான பணியை பாதியில் நிறுத்திய இந்த நிலையில் இன்று மீண்டும் செல்போன் டவர் அமைக்க தேவையான ஆதரவாளர்களுடன் வந்ததால் அதை பொருத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment