தருமபுரி பேருந்து நிலையம் மாவட்ட பொது சுகாதார நோய்த்தடுப்பு துறையின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது, தருமபுரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெமினி பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத்தொடர்ந்து சந்தப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தமிழ்ச்செல்வன் கார்த்தி சுப்பிரமணியன் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
No comments:
Post a Comment